Sunday, February 27, 2011

தொடரான விழிப்பு நிலை

பக்ர் இப்னு அப்துல்லாஹ் என்ற தாபிஈ பின்வருமாறு கூறுவார் :
உன்னை விட பெரியவரைக் கண்டால் "அவர் ஈமான் கொள்வதிலும் நல்ல மல் செய்வதிலும் என்னை முந்திவிட்டார். அவர் என்னை விடச் சிறந்தவர்" என்று கூறுவீராக. உன்னை விட சிறியவரைக் கண்டால் "நான் பாவங்கள் செய்வதிலே அவரை முந்திவிட்டேனே. அவர் என்னை விடச் சிறந்தவர்" எனக் கூறுவீராக. உன்னை உனது சகோதரர்கள் கண்ணியப்படுத்தினால் "இந்த கண்ணியம் அவர்களிடமிருந்து பெறப்பட்டதே தவிர வேறில்லை"  என்று கூறுவீராக. உனது சகோதரர்களிடம் ஒரு குறைபாட்டைக் கண்டால் "இது நான் ஏற்படுத்திய பாவமே!" எனக் கூறுவீராக. (ஸிபதுஸ் ஸப்வா 3/248)
றாபிஅதுல் அதவிய்யா என்ற தாபிஈ பெண் மணி தனது படுக்கையிலிருந்து எழுந்து தனது உள்ளத்தை நோக்கி, "எனது உள்ளமே! நீ தூங்கிஎப்போது விழித்தெழுவாய் என்பது உனக்குத் தெரி யுமாநீ தூங்கிமறுமையில் ஸூர் ஊதப்படும் வேளையில்தான் எழுப்பப்படலாமல்லவா?!" என்று கூறுவார். (ஸிபதுஸ் ஸப்வா 4/30)
இவ்வாறுதான் எமது முன்னோர்களான தாபிஈன்கள் தொடர் விழிப்பு நிலையில் இருந்தனர். உள்ளத்தை தொடர்ந்தும் முஹாஸபா செய்து கொண்டே இருந்தனர். இதுதான் ஸஹாபாக்கள் தாபிஈன்களுக்கு கொடுத்த தர்பியாவாகவும் இருந்தது.
சகோதரர்களே! நாமும் தொடர் விழிப்பு நிலையில் இருப்போம். வெற்றிபெறு வோம் இன்ஷா அல்லாஹ்.

ஒரு தியாகியின் வரலாறு

உஸ்தாத் அப்துல் பத்தாஹ்

அப்துஹு இஸ்மாஈல் (றஹ்)

ஏ.எஸ்.எம் நௌஷாட்



"நாமே இந்த வேதத்தை இறக்கி வைத்தோம்மேலும் நாமே அதனைப் பாது காப்போம்" என்ற அல் குர்ஆன் வசனம்அல்லாஹுதஆலா இந்த வேதத்தைஇந்த இஸ்லாத்தைப்  பாதுகாக்கும் பொறுப்பை எடுத்துள்ளதைக் கூறுகின்றது. பாதுகாக்கின்ற அந்தப் பணியை அல்லாஹ் அற்புதங்கள் மூலமாகவோ,வானத்திலிருந்து மலக்குகளை இறக்கியோ நிறைவேற்றமாட்டான். மாற்ற மாகஅப்பணியை நிறைவேற்றுவதற்காகவே படைக்கப்பட்டுள்ள சில மனிதர் களைக் கொண்டுதான் அவன் அதனை நிறைவேற்றுவான்.
1924ம் ஆண்டு இஸ்லாமிய கிலாபத் வீழ்ச்சியடைகின்றது. இஸ்லாத்தின் தனித்துவம் உலகத்திலிருந்து துவம்சம் செய்யப்படுகின்றது. இந்நிலையில் அல்லாஹ் இந்த மார்க்கத்தைக் கட்டிக்காப்பதற்காக இந்நூற்றாண்டின் ஆரம் பம் முதலே பல சீர்திருத்தவாதிகளை இவ்வுலகிற்கு அனுப்பிவைத்துள்ளான். இமாம் ஹஸனுல் பன்னா,மௌலானா மௌதூதிஸைய்யித் குதுப்அப்துல் காதர் அவ்தாஅப்துல் பத்தாஹ் இஸ்மாஈல்... போன்ற பலரை இவ்வரிசையில் குறிப்பிட்டுக்காட்டலாம்.
அந்தவகையில்இந்த இஸ்லாமிய சீர்திருத்தப் பணியை மிகவும் கச்சிதமாக செய்துவிட்டு,அதற்கான மிகப்பெரும் பரிசாக அல்லாஹ்வின் பாதையில் உயிர்த்தியாகம் செய்யும் பாக்கியத்தையும் பெற்றுக்கொண்ட ஷஹீத் உஸ்தாத் அப்துல் பத்தாஹ் அப்துஹு இஸ்மாஈல் (றஹ்) அவர்களது வாழ்க்கை வரலாற்றை இவ்விதழில் நோக்குவோம்இன்ஷா அல்லாஹ்.
உஸ்தாத் அப்துல் பத்தாஹ் அப்துஹு இஸ் மாஈல் (றஹ்) அவர்கள் 1925ம் ஆண்டு எகிப்தி லுள்ள குப்ர் பித்தீக் என்ற கிராமத்தில் மார்க்கப் பற்றுள்ள ஒரு குடும்பத்திலே பிறக்கின்றார். இவரது தந்தை மார்க்க விடயங்களில் மிகவும் கவனம் செலுத்துபவராகக் காணப்பட்டார். தனது பிரதேசத்திலுள்ள சிறுவர்கள் மார்க்கக் கல்வியைப் பெற்றுக்கொள்வதற்காக வேண்டி சிறிய தொரு பாடசாலையையும் அமைத்திருந் தார். சிறு வயது முதல் கல்வியில் ஆர்வமாயிருந்த உஸ்தாத் அப்துல் பத்தாஹ்,காலப்போக் கில் வியாபாரத் துறையில் ஆர்வம் ஏற்படவேஅதிலேயே தொடர்ந்து ஈடுபடுகின்றார். சிறந்த முன்மாதிரியான ஒரு வியாபாரியாக இவர் திகழ்ந்தார். ஆனால்இவரது வியாபாரம் மார்க்க அறிவைப் பெறுவதை விட்டும் அவரை சற்றும் தடுத்து விடவில்லை.
திருமண வாழ்வு:
1952ம் ஆண்டு தனது 28ம் வயதிலே தனது சிறிய தந்தையின் மகளைத் திருமணம் செய்து கொள்கின்றார். சிறந்த மார்க்கப்பற்றுள்ள ஒரு பெண்ணாக அவரது மனைவி இருந்தார். இஸ்லாத்திற்காகதஃவாவிற்காக உழைக்கும் தனது கணவனுக்கு உதவுவதும்அவரை அதிலே உறுதிப்படுத்தும் வார்த்தை களைக் கூறுவதும் அவரது முக்கியமான பணியாக இருந்தது. அல்லாஹ்வுக் காக வேண்டிதனது கணவனை சந்திக்க வருபவர்களை உபசரிப்பதை அவர் ஒரு இபாதத்தாகக் கருதினார். உஸ்தாத் அப்துல் பத்தாஹ் அவர்களும் தனது குடும்பத்தின் மீதான தனது கடமைகளை சிறப்பாக நிறைவேற்றக் கூடிய வராக இருந்தார். இவ்வாறான பலமான மார்க்கப் பற்றும் சிறந்த புரிந்துணர் வுகளும் விட்டுக்கொடுப்புக்களும் அவர்களது திருமண வாழ்வை நிம்மதியான தாக மாற்றின.
இஹ்வானியத் தொடர்பு:
சிறுவயது முதல் இமாம் ஹஸனுல் பன்னாவுடன் நெருங்கிய தொடர்பினை வைத்திருந்தார். இதனால் இமாம் ஹஸனுல் பன்னாவுக்கு மிக நெருக்கமான,நம்பிக்கையான ஒரு சகோதரராக இவர் காணப்பட்டார். பல ரகசியங்களை அறிந்தவராயிருந்தார். தஃவா விடயங்களில் மிகவும் கரிசனையுடன் ஈடுபடக் கூடிய ஒரு உண் மையான சகோதரராக இவர் காணப்பட்டார்.
முதலாவது சிறை வாழ்வு:
உஸ்தாத் அப்துல் பத்தாஹ் இஸ்மாஈல் அவர்கள் திருமணமுடித்து இரண்டு வருடங்களில் 1954ம் ஆண்டு எகிப்திய அரசாங்கத்தினால் கைதுசெய்யப்படு கின்றார். காரணம்இவர் லா இலாஹ இல்லல்லாஹ் என்பதை சரியாகப் புரிந்து அதை நடைமுறைப்படுத்தியமைதான். அல்குர்ஆன் இதனை இப்படிக் கூறுகின்றது: "கண்ணியத்திற்கும் புகழுக்குமுரிய அல்லாஹ்வை ஈமான் கொண்டதன் காரணமாகத் தான் அந்த முஃமின்களை அவர்கள் (இஸ்லாத் தின் எதிரிகள்) பழிவாங்குகின்றார்கள்." (ஸூறதுல் புரூஜ்: 8)
இஹ்வானிய வரலாற்றில் 1954ம் ஆண்டு மறக்க முடியாத ஒரு ஆண்டாக உள்ளது. அதில் முக்கியமானபெரும்பாலான இஹ்வான்கள் கைதுசெய்யப் படுகின்றார்கள். கடுமையாக வேதனை செய்யப்படுகிறார்கள். சிறைக்கு வெளி யில் இஹ்வான்களது செயற்பாடுகள் நின்றுவிட்டன என்று நினைக்குமள விற்கு அவர்களது செயற்பாடுகள் ஸ்தம்பிதமடைகின்றன. இவ்வாறு இஹ் வான்களை அதிகளவில் கைது செய்தமையின் நோக்கமும் அவர்களது செயற் பாடுகளை முற்றாக நிறுத்துவதுதான். தமது நோக்கம் நிறைவேறிவிட்டதாக இஸ்லாத்தின் எதிரிகள் நம்பினார்கள். ஆனால்சத்தியம் ஒரு நாள் மிகைத்தே தீரும் என்பது அல்லாஹ் எமக்களித்துள்ள வாக்குறுதியாகும்.
சிறை வேதனை:
இஹ்வான்கள் சிறைப்பிடிக்கப்பட்ட போது கடுமையாக வேதனை செய்யப்பட் டார்கள். உண்மையில்உறுதியான ஈமானியப் பலம் இல்லாதவர்களால் இந்த வேதனைகளைத் தாங்கிக்கொள்ள முடியாது. இந்த வேதனை களைக்கூட இஹ்வான்களது தஃவாவிற்கு உதவி செய்யும் ஒரு விடயமாகவே அவர்கள் கருதினார்கள். ஏனெனில்இதன் மூலம் கொள்கையில் உண்மையான பற்றுள் ளவர்களையும்சுய இலாபங்களுக்காக வேண்டி தஃவா செய்பவர்களையும் அவர்களால் பிரித்தறிய முடியுமாயிருந்தது.
உஸ்தாத் அப்துல் பத்தாஹ் அப்துஹு இஸ்மாஈல் (றஹ்) அவர்களும் கடுமையாக வேதனை செய்யப்பட்டார்கள். அந்த வேதனைகளில் ஒன்றுதான்பொலிஸாரின் வளர்ப்பு நாய்களை பல நாட்கள் பசியில் விட்டுவிட்டு இவரது சிறையில் போட்டுவிடுவார்கள். பின்னர் நடக்கும் விடயங்களைக் கூறவேண் டிய அவசியம் கிடையாது. ஒருமுறை உஸ்தாத் அவர்கள் இவ்வாறு வந்த ஒரு நாயின் கழுத்தை நெரித்து கொன்றுவிடுகின்றார்.
அவருக்கு செய்யப்பட்ட வேதனையைப் பற்றி ஒரு இஹ்வானிய சகோதரர்: அவரை முகம்உள்ளங்கை,கால் பாதங்கள் கிழிக்கப் பட்ட நிலையிலும்தோல் புயங்களும் கால் களும் உடைக்கப்பட்ட நிலையிலும் பல தடவை கள் தான் கண்டுள்ளதாகக் குறிப்பிடுகின்றார். இதுதான் சத்தியத்திற்காக,இஸ்லாத் தைப் பாதுகாப்பதற்காக அவர்கள் செய்த தியாகம்.
மிகப் பெரும் சேவை:
இஹ்வான்களது வளர்ச்சியைக் கண்டு சகித்துக்கொள்ள முடியாத இஸ்லாத் தின் எதிரிகள் இவர்களுக்கு எதிராக பல சூழ்ச்சிகளை மேற்கொள்கிறார்கள். பல அடக்குமுறைகளைக் கைக்கொள்கிறார்கள். அந்தவகையில்அவ்வமைப் பின் தலைவரான இமாம் ஹஸனுல் பன்னா (றஹ்) கொலைசெய்யப்படு கின்றார். அதன் ஆதரவாளர்கள் கைது செய்யப்படுகிறார்கள். 1954ம் ஆண் டிலே இஹ்வான்களைப் பூண்டோடு கிள்ளி எறிவதற்கான ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. இந்த அனைத்து செயற்பாடுகளும் இஹ்வான்களுக்கு ஒருவகையான சோர்வை ஏற்படுத்துகின்றது. நம்பிக்கையீனத்தை ஏற்படுத்து கின்றது.
இந்நிலையில், 1957ம் ஆண்டு உஸ்தாத் அப்துல் பத்தாஹ் அப்துஹு இஸ் மாஈல் (றஹ்) அவர்கள் சிறையிலிருந்து வெளியேறுகின்றார். இஃவான்களுக்கு மத்தியில் மீண்டும் இஹ்வானிய தஃவாவைக் கட்டியெழுப்ப வேண் டியதன் தேவையை அவர் உணர்கின்றார். அதற்காக கடுமையாக உழைக்கின்றார். முழு தஃவாவும் ஸ்தம்பிதமடைந்திருந்த அந்த நேரத்தில்தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவராக அணுகி தஃவாவை மீளக்கட்டியெழுப்ப வேண்டி யதன் தேவையை வலியுறுத்துகின்றார்.
இவருடன் சேர்ந்து அப்துல் பத்தாஹ் ஷரீப்இவழ் அப்துல் ஆல்ஸைனப் அல் கஸ்ஸாலி போன்றோரும் இப்பணியில் ஈடுபடுகின்றார் கள். மூன்று நாட்கள் இரவு பகலாக விழித்திருந்து,இதற்கான ஆரம்பத் திட்டத்தை தீட்டு கின்றார்கள். தனிமனிதர்களை உருவாக்குவதுதான் இவர்களின் ஆரம்ப இலக் காக இருந்தது. அல்லாஹ்வின் உதவியாலும்இவர்களது விடா முயற்சியின் காரணமாகவும் இஹ்வான்களது செயற்பாடுகள் மீண்டும் புத்துயிர் பெறுகின் றன. தலைமறைவாக இருந்தவர்கள் மீண்டும் தலைகாட்ட ஆரம்பிக்கின்றார் கள்.
உஸ்தாத் அப்துல் பத்தாஹ் இஸ்மாஈல் அவர்கள் இதற்காக செய்த முயற்சிகள் அளப்பரியன. அக்காலத்திலே அவர் ஐவேளைத் தொழுகைகளையும் ஐந்து மாகாணங்களில் தொழக் கூடியவராக இருந்ததாக அவருடன் இருந்தவர்கள் குறிப்பிடுகின்றார்கள். அந்தளவிற்கு இந்த மகத்தான பணியைக் கட்டியெழுப்புவதற்காக ஒவ்வொரு இடமாகச் சென்று கஷ்டப்பட் டார்கள். இப்படிக் கஷ்டப்பட்டு மீள்கட்டியெழுப்பிய தஃவாதான் இன்று முழு உலகை யுமே அரவணைத்துக் கொண்டுள்ளது. அந்த அரவணைப்பில் உள்ள ஒவ் வொரு சகோதரரும் செய்யும் நன்மையும் உஸ்தாத் அப்துல் பத்தாஹ் அவர்களையும் சென்றடையும் என்பதில் எவ் வித சந்தேகமும் கிடையாது. (இன்ஷா அல் லாஹ்)
தாம் இஹ்வான்களது செயற்பாடுகளை முற்றாக நிறுத்திவிட்டோம் என்ற பிரமையில் இருந்த இஸ்லாத்தின் எதிரிகளை இவர்களது செயற்பாடுகள் மீண்டும் நிம்மதியிழக்கச் செய்து விடுகின்றன. இஹ்வான்கள் சத்தியத்தில் இருக் கும் காலமெல்லாம் அவர்களைத் தம்மால் அழிக்க முடியாது என்பதை அவர்கள் ஆழ் மனதால் ஏற்றுக்கொண்டார்கள்.
இஹ்வான்களது வரலாற்றில் உஸ்தாத் அப்துல் பத்தாஹ் அப்துஹு இஸ்மாஈல் (றஹ்) அவர்களது பெயர் ஒருபோதும் மறக்கமுடியா தது. இந்த இஹ்வானிய தஃவாவின் வளர்ச்சிக்கும்அதனை மீளக் கட்டியெழுப்புவதற் கும் இவர் செய்த சேவைகள் அவ்வளவு அளப் பரியன. காலத்தால் மறந்திட முடியாதவை. இவர்களது விடாமுயற்சியால்தான் இஹ்வானிய தஃவா மீண்டும் புத்துணர்ச்சி பெறுகின்றது. இதுதான் இவர்கள் இந்த தஃவாவிற்கு செய்த மிகப்பெரும் சேவையாகக் கணிக்கப்படுகின்றது.
மார்க்கப் பற்று:
உஸ்தாத் அப்துல் பத்தாஹ் அவர்கள் மிகவும் மார்க்கப்பற்று கொண்டவராகத் திகழ்ந்தார். தனது ஒவ்வொரு அசைவும் இஸ்லாத்தின் வழிகாட்டல்களுக்கேற் பவே அமைய வேண்டும் என்பதில் கரிசனையாயிருந்தார். இபாதாக்களில் கூடிய கவனம் செலுத்தினார். இரவு பூராக தூங்காமல் நின்று வணங்குவார் என்று இவரைப் பற்றி இவரது தஃவா சகோதரர்கள் குறிப்பிடு கின்றார்கள். இதுதான்;இவர்களது தஃவா செயற்பாடுகள் ஆக்கபூர்வமானவையாகவும் வினைத் திறன்மிக்கனவாகவும் மாறியமைக்கான அடிப்படைக் காரணமாகும். தஃவாக்கள் வெற் றியளிப்பதற்கு அல்குர்ஆன் வகுத்து வைத்துள்ள நியதியும் இதுவாகும்.
இரண்டாவது சிறை வாழ்வு:
இந்த தஃவாவை மீளக்கட்டியெழுப்பும் பணியில் முழு மூச்சாக ஈடுபட்டிருந்த உஸ்தாத் அப்துல் பத்தாஹ் அவர்களது செயற்பாடுகள்முஸ்லிம்களது பெயர்களை வைத்துக்கொண்டு இஸ்லாத்திற்கு எதிராக செயற்பட்டுக்கொண்டி ருந்தவர்களுக்கு பெரும் தொல்லையாக மாறி யது. இஹ்வான்கள் மீண்டும் பலமான சக்தியாக மாறிவருவதை இவர்களால் சகித்துக்கொள்ள முடிய வில்லை. மீண்டும் "லா இலாஹ இல்லல் லாஹ்" என்பதன் கருத்தை விளங்கிஅதனை நடைமுறைப்படுத்துபவர்களை சிறைப் பிடிக் கும் படலம் ஆரம்பமாகின்றது. இம்முறை இஹ்வான்களை இயக்கிக் கொண்டிருந்த தலை மைகள்தான் அவர்களது இலக்காயிருந்தது.
அந்தவகையில்உஸ்தாத் ஸெய்யித் குத்ப்,முஹம்மத் யூஸுப் ஹவ்வாஷ்அலி அப்துஹு அஷ்மாவீ போன்றவர்களுடன் சேர்த்து இஹ்வான் களை இயக்குகின்ற டைனமோ என்று அழைக் கப்பட்ட உஸ்தாத் அப்துல் பத்தாஹ் இஸ்மாஈலும் கைதுசெய்யப்படுகின்றார்கள். வழமை போன்று கடுமையாக வேதனை செய்யப்படு கின்றார்கள். ஆனால்அல்லாஹ்வுக்காக வேண்டிதூய்மையாக இந்த தஃவாவைப் பொறுப்பெடுத்திருந்தவர்களை அந்த வேதனைகள் கடுகளவும் அசைத்து விடவில்லை.
மனைவியின் பொறுமை:
உஸ்தாத் அப்துல் பத்தாஹ் இஸ்மாஈல் அவர்கள் இவ்வாறு இஸ்லாத்திற் காக பல தியாகங்கள் செய்வதற்கு அவரது மனைவியின் பங்களிப்பும் காத்திரமானது. தஃவா பணிகளுக்காக அவர் தூர பிரதேசங்களுக்கு செல்லும் போதெல்லாம் வீட்டின் பொறுப்பை அவர் முழு மனதுடன் ஏற்றுக்கொள்வார். தனது வீட்டில் நடக்கும் நிகழ்ச்சிகளின்போது சகோதரர்களுக்குத் தேவையான எல்லா வசதிகளையும் செய்து கொடுப்பார். இது மட்டுமல்ல,தனது கணவன் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் வழக்கு விசாரணைக்காக அவர் வரும்போது அவருக்கு அருகாமையில் அமர்ந்துகொண்டு தொடர்ந்தும் தனது கொள்கையில் உறுதியாக இருக்குமாறு ஆலோசனை கூறிக்கொண்டே இருப் பார். தனது கணவனுக்கு மரண தண்டனை வழங்குவதாகத் தீர்ப்பளிக்கப்பட்ட சந் தர்ப்பத்தில் தனது குடுப்பத்திலுள்ள அடுத்தவர்களுக்கு ஆலோசனை கூறக் கூடியவராக இருந்தார். இறுதியாகதனது கணவனுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுவிட்ட செய்தியை செவிமடுத்ததும் மயக்கமுற்று விழுகின் றார். மயக்கம் தெளிந்து எழுந்ததும்தனது கணவ னுக்கு ஷஹீதாகக் கூடிய பாக்கியத்தை வழங்கி யமைக்காக அல்லாஹ்வுக்கு ஷுக்ர் செய்கின் றார்.
உயிர்த் தியாகம்:
உஸ்தாத் அப்துல் பத்தாஹ் இஸ்மாஈல் அவர்கள் இஸ்லாத்திற்காக தியாகங்கள் செய்வதில் மிகவும் ஆர்வமாயிருந்தார். அந்த ஆர்வத்தின் உச்ச கட்டமாகதனது உயிரையும் இந்த இஸ் லாத்திற்காகத் தியாகம் செய்ய அளவற்ற ஆசை கொண்டிருந்தார். அதில் தூய்மையாகவும் இருந்தார்.
இஸ்லாத்தின் பெயரால் இஸ்லாத்தை அழிப்பதற்காக கங்கணம் கட்டிக் கொண்டிருந்த அந்த இஸ்லாத்தின் எதிரிகளுக்கு இவர்கள் பெரும் தலையிடி யாக இருந்தார்கள். இவர்களை எக்கார ணம் கொண்டும் சத்தியத்தை விட்டு அசைக்க முடியாது என்பதை யதார்த்தபூர்வமாக ஏற்றுக் கொண்டார்கள். எனவே,இவர்களை தொடர்ந் தும் உயிரோடு விட்டால்,இஸ்லாம் அதன் உண்மையான வடிவில் நடைமுறைப்படுத்தப்படும் என்பதையும் உணர்ந்துகொண்டார்கள். எனவேஇவர்களைக் கொலை செய்ய தீர்மானிக் கின்றார்கள். அநியாயத்தை சட்டபூர்வமாக நிறை வேற்றுகின்றார்கள். அந்தவகையில்உஸ்தாத் ஸெய்யித் குத்ப்யூஸுப் ஹவ்வாஷ்அப்துல் பத்தாஹ் இஸ்மாஈல் ஆகியோருக்கு அன்றைய நீதி(?)மன்றம் மரண தண்டனை வழங்கி தீர்ப் பளிக்கின்றது. அப்போது ஒரு சத்தம் நீதி மன்றத்தையே அதிர வைக்கின்றது. அது தமது உயிரை விடப்போகின்றோம் என்பதற்காக அஞ்சி அலறிய சத்தமல்ல. மாறாகஅல்லாஹ்வை உறுதியாக ஈமான் கொண்ட உள்ளத்திலிருந்து வந்த சத்தமது. ஆம்உஸ்தாத் அப்துல் பத்தாஹ் இஸ்மாஈல் அவர்கள்தான் பின்வருமாறு சத்த மிடுகின்றார்: "கஃபாவின் இரட்சகனான அல்லாஹ்வின் மீது ஆணையாகநான் வெற்றியடைந்து விட்டேன்". ஈமானி யப் பலத்தின் காரணமாகதமக்கு வழங்கப்படும் மரண தண்டனையையே அவர்கள் வெற்றியாகக் கருதினார்கள்.
1966ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 29ம் திகதி எந்தவிதமான முன்னறிவிப்பும் இன்றி திடீரென உஸ்தாத் ஸெய்யித் குத்ப்யூஸுப் ஹவ்வாஷ்,அப்துல் பத்தாஹ் இஸ்மாஈல் ஆகிய மூவருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்படு கின்றது. அவர்களது குடும்பங்களுக்குக் கூட பின்னர் தான் அறிவிக்கப்படுகின் றது.
இதுதான் இஸ்லாத்திற்காகவே வாழ்ந்து,அதற்காகவே தனது உயிரையும் தியாகம் செய்த உஸ்தாத் அப்துல் பத்தாஹ் இஸ்மாஈல் அவர்களது வாழ்க்கை. இதுதான் இஸ்லாத்திற்காக வாழ்வதற்கு தனது மனைவிக்கு அவர் வழங்கி யிருந்த பயிற்சி. இப்படியான இஸ்லாமிய குடும்பங்கள் உருவாகும் போதுதான் அல் லாஹுதஆலாவின் மார்க்கம் அவன் விரும்பிய முறையில் இவ்வுலகில் நடைமுறைப்படுத்தப் படும்.
அந்தவகையில்அல்லாஹ்வின் மார்க்கத்தை முழுமையாக விளங்கி அதனை முழுமையாக நடைமுறைப்படுத்தக் கூடியவர்களாக அல்லாஹ் எம்மையும் ஆக்குவானாக.

இதுதான் எமது சகோதரத்துவம்

நோயின் காரணமாக நான் சிகிச்சை பெற ஐரோப்பா சென்றிருந்தேன். புதிய இடம். புதிய முகங்கள். விமான நிலையத்தில் சில இளைஞர் கள் என் வரவுக்காக காத்திருந்தனர். நான் அவர்களை இதற்கு முன்னர் கண்டதும் இல்லை. அவர்கள் என் வரவிற்காகவே காத்திருந்தனர். என்னைப்பார்த்து புன்னகைத்தனர். இருக்க இடம் தந்தனர். உண்ண உணவு தந்தனர். நான் கேட்காமலேயே பல உதவிகளைச் செய்தனர். அவர்களுக்கும், எனக்கும் எந்த உறவும் இல்லை. ஒரு உறவுதான் இருந்தது. அதுவே சகோதரத்துவ உறவு. அதுவே அவர்களை எனது நீண்ட நாள் நண்பர்கள் போல பழகவும், உதவி ஒத்தாசைகளைச் செய்யவும் செய்தது. இதனைக் கூறும்போது கலாநிதி முஸ்தபா ஸிபாஈ அவர்களின் கண்களிலிருந்து கண்ணீர் துளி மாலை மாலையாக வடிந்தது.
உண்மையில், அல்லாஹ்வுக்காக சகோதரர்களாக இருப்பதன் விளைவு இதுவாகவே இருக்கும். இதுவே இஸ்லாத்தின் சிறப்பம்சம். மட்டுமன்றி,இஹ்வானிய தஃவாவின் சிறப்பியல்புமாகும். இதனையே இஹ்வானிய சகோதரர் கலாநிதி முஸ்தபா ஸிபாஈ மேலுள்ள வாறு குறிப்பிட்டார்கள்.
இதனை அல்லாஹ் ஸூறதுல் அன்பாலின் 63ஆம் வசனத்திலே பின்வரு மாறு குறிப்பிடுகின்றான்: "அவர்களது உள்ளங்களுக்கிடையே (அல்லாஹ்) பிணைப்பை ஏற்படுத்தினான். (நபியே!) நீர் உலகிலுள்ள அனைத்தையும் செலவழித்தாலும் அவர்களுக்கு மத்தியில் பிணைப்பை ஏற்படுத்த முடியாது. எனினும், அல்லாஹ் அவர்களுக்கு மத்தியில் பிணைப்பை ஏற்படுத்தினான். நிச்சயமாக அவன் மிகைத்தவனும், மிக ஞானம் மிக்கவனுமாவான்" (அல் அன்பால் : 63)
இதனையே இமாம் ஹஸனுல் பன்னா பின்வருமாறு குறிப்பிடுகிறார்: "எமது தஃவா பின்வரும் மூன்று அடிப்படைகளைச் சார்ந்துள்ளது. நுணுக்கமான புரிதல், ஆழமான ஈமான், உறுதியான அன்பு."
நாம் எங்கிருக்கிறோம்? இதனை நடை முறைப்படுத்த முயற்சி செய்வோமா? இன்ஷா அல்லாஹ்...

எகிப்திய இளைஞர்களை புரட்சிக்கு பாடி ஆர்வப்படுத்திய யூசுப் அல் கர்ழாவி

OurUmmah: எகிப்தில் இன்று புரட்சி வெற்றி கொண்டாட்டங்கள் கெய்ரோவின் விடுதலை சதுக்கதில் தற்போது நடைபெறுகின்றது இன்று ஜும்மாஹ் உரையை நாடு திரும்பியுள்ள சர்வதேச முஸ்லிம் புத்திஜீவிகள் அமைப்பின் தலைவரும் உலக புகழ்பெற்ற இஸ்லாமிய புத்ஜீவியுமான டாக்டர் யூசுப் அல் கர்ழாவி நடத்தியுள்ளார் எகிப்து முன்னாள் ஜனாதிபதி அன்வர் சதாத் கொலைக்கு பின்னர் எகிப்தில் 1981 ஆம் ஆண்டு தனது கடைசி ஜும்மாஹ் குத்பா உரையை நிகழ்த்தி இருந்தார் அதன் பின்னர் சர்வாதிகார முபாரக் அரசாங்கம் எகிப்தில் இவர் ஜும்மாஹ் குத்பா உரையை நிகழ்த்த தடை விதித்தது அதன் பின்னர் நாட்டை விட்டு வெளியேறிய டாக்டர் யூசுப் அல் கர்ழாவி தற்போது நாடு திரும்பியுள்ளார்
இவர் இன்று கெய்ரோவின் விடுதலை சதுக்கதில் நடைபெற்ற புரட்சி வெற்றி கொண்டாட்டங்களிலும் மக்களுடன் கலந்து கொண்டார் இவருக்கான பாதுகாப்பை எகிப்தின் இராணுவ நிர்வாகம் வழங்கியுள்ளது இவரின் ஜும்மாஹ், தொழுகை குத்பா உரையை ஆகியன விரிவாக அல் ஜஸீரா உட்பட மற்றும் சில சர்வதேச ஊடகங்களில் நேரடியாக காட்சிப்படுத்தபட்டன ஹுஸ்னி முபாரக் அரசு பல இஸ்லாமிய புத்திஜீவிகளை மஸ்ஜிதுகளில் உரையாற்ற தடை விதித்திருந்தது தற்போது அவர்கள் நாடு திரும்பியுள்ளதுடன் ஜும்மாஹ், தொழுகை குத்பா உரைகளையும் நடாத்தியுள்ளனர்   இவர்களுள் முக்கியமான இமாமான அஹ்மத் அல் – மகால்லாவி எனவர் அலக்ஸ் நகரில் நடைபெற்ற ஜும்மாஹ், தொழுகை மற்றும் குத்பா உரைகளையும் நடாத்தியுள்ளார் என்பது குறிபிடத்தக்கது.
அண்மையில் ஒரு ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட டாக்டர் யூசுப் அல் கர்ழாவி எகிப்தின் மக்கள் புரட்சி பற்றியும் எகிப்திய வாலிபர்களை ஊக்கிவித்தும் பாடல் ஒன்றை பாடிய காட்சிகள் கொண்ட மிகவும் அரிதான வீடியோ பதவு ஒன்றை இங்கு தருகின்றோம்.

யூத அமைப்புகளின் மாநாடு தொடர்பில் கிரீக் நாட்டு மக்கள் அச்சத்தில்

அமெரிக்காவின் பிரதான யூத இயங்கங்கள், அமைப்புகள், நிறுவங்கள், அரசியல் அமுக்க குழுக்களின் தலைவர்கள் இந்த வாரம் கிரீக்நாட்டில் மாநாடு ஒன்றை நடத்த ஏற்பாடுகளை செய்து வருகின்றானர் இந்த இவர்களின் மாநாடு தொடர்பாக அந்த நாடு மக்கள் மத்தியில் அச்ச உணர்வு தோன்றியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன இந்த சியோனிஸ மாநாட்டை தமது நாட்டில் நடத்த வேண்டாம் என்று பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த மாநாடு தொடர்பாகவும் அரசாங்கள் இஸ்ரேலுடம் கொண்டுள்ள உறவுகள் தொடர்பாகவும் கருத்துரைத்துள்ள கிரீக் நாட்டின்  பிரபல  இசை அமைப்பாளரும் தயாரிப்பாளருமான மிகிஸ் தேடோரகிஸ் – Mikis Theodorakis- என்பவர் கிரீக் அரசாங்கம் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹுவை அவர் காஸாவிழும் லெபனானிலும் செய்த குற்றங்களுக்காக   கைது செய்து நீதிமன்றில் நிறுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார் விரிவாக
கடந்த திங்கள் கிழமை கிரீக் நாடு தொலைக் காட்சி ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியில் இதனை தெரிவித்துள்ளதுடன் கிரீக் பிரதமர் இஸ்ரேலிய தரப்புடன் சந்திப்பை நடத்தியதையும் கடுமையாக விமர்சித்துள்ளார் மேலும் அவர் இந்த வாரம் கிரீக் தலைநகரான எதன்சில் நடைபெரபோகும் அமெரிக்க யூத அமைப்புகளின் தலைவர்கள் ஒன்றுகூடும் மாநாடு தொடர்பாக கருத்து தெரிவிக்கையில் நாங்கள் ஆபத்தில் இருக்கின்றோம் சியோனிஸ்ட்கள்  மாநாடு ஒன்றுக்காக கிரீக்கில் ஒன்று கூடபோகின்றார்கள் “We are in danger. [...] the Zionists will gather in Greece for a conference.” என்றும் தெரிவித்துள்ளார் இவரின் இந்த கருத்துகள் கிரீக் ஊடகங்களில் பிரதான இடத்தை பிடித்துள்ளதாக தெரிவிக்கப்டுகின்றது.

கடாபியை சுடுமாறு யூசுப் அல் கர்ழாவி லிபிய இராணுவத்தை கேட்டுள்ளார்

 லிபியாவின் மக்களின் நிலை மிகவும் மோசமடைந்து வருவதாக சர்வதேச தகவல்கள் தெரிவிகின்றன இது வரை 1000பேராவதுகொல்லப்பட்டுள்ளனர் என்று மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன என்று பிரஸ்டிவி தெரிவிக்கின்றது லிபியாவின் ராஜதந்திரிகள் பலரும் தமது பதவிகளை ராஜினாமா செய்துள்ளதுடன் கடாபி பதவி விலக வேண்டும் என்று கோரியுள்ளனர்.
ஆர்பாட்டம் செய்யும் மக்கள் நேரடியாக சுட்டு கொல்லப்படுகின்றனர் கடாபிக்கு ஆதரவான இராணுவம் மக்கள் வீதிக்கு இறங்கவேண்டாம் என்று ஒலி பெருக்கில் மூலம் அறிவித்து வருகின்றது.யுத்த களங்களில் பயன்படுத்தப்படும் விமானங்கள் திரிபோலி நகரங்களில் குண்டுகளை வீசி வருகின்றது இந்த நிலை தொடர்பாக அல் ஜஸீராவுக்கு கருத்துரைத்துள்ள சர்வதேச முஸ்லிம் புத்திஜீவிகள் அமைப்பின் தலைவரும் உலக புகழ்பெற்ற இஸ்லாமிய புத்ஜீவியுமான விரிவாக Videoடாக்டர் யூசுப் அல் கர்ழாவி ‘லிபிய இராணுவத்தில் யாருக்கு கடாபி மீது சுட முடியுமோ அவர் அவ்வாறு செய்யவேண்டும்’ என்றும் பொதுமக்களை கொலை செய்ய பிறப்பிக்கப்படும் கட்டளைகளுக்கு இராணுவம் அடிபணிய வேண்டாம் என்றும் லிபிய இராணுவத்தை கோரியுள்ளார்

அரபு-முஸ்லிம் நாடுகளில் ஜனநாயகம் மலர வேண்டியது காலத்தின் கட்டாயம்

எகிப்தில் ஏற்பட்டுள்ள மக்கள் எழுச்சியை பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியாவின் சேர்மன் இ.எம். அப்துர் ரஹ்மான் வரவேற்றுள்ளார். அத்தோடு இந்த எழுச்சியில் நவீன காலனியாதிக்க, ஸியோனிஸ சக்திகளின் கைப்பாவைகள் ஓங்காமல் இருக்க எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அறிக்கை விடுத்துள்ளார்.
துனிசியாவில் மக்கள் எழுச்சி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து எகிப்தில் ஹுஸ்னி முபாரக்கின் நீண்ட கால சர்வாதிகாரத்தை எதிர்த்து அந்த நாட்டு மக்கள் களத்தில் இறங்கியுள்ளனர். அரசுகளுக்கெதிரான ஆர்ப்பாட்டங்கள் யெமனிலும், ஜோர்டானிலும் வெடிக்க ஆரம்பித்துள்ளன.
ஒட்டுமொத்த அரபு-முஸ்லிம் உலகில் இந்த எழுச்சி காலத்தின் கட்டாயமாக, தவிர்க்க முடியாத காற்றாக வீசிக்கொண்டிருக்கிறது. கடந்த பல ஆண்டுகளாக நவீன காலனிய சக்திகளின் பொம்மை அரசுகள் இந்த நாடுகளில் மக்கள் விரும்பிய ஜனநாயகம், சுதந்திரம், நீதி ஆகியவைகளை காலில் போட்டு மிதித்து, அவர்களை அடக்கி ஒடுக்கி வந்தன.
மக்களின் அடிப்படை வசதிகள் புறக்கணிக்கப்பட்டன. மனித உரிமைகள் நசுக்கப்பட்டன. ஜனநாயகத்தை மீண்டும் மலரச் செய்வதற்கு ஏதாவது முயற்சிகள் நடந்தால் அவைகள் பல சதித்திட்டங்கள் மூலம் ஒடுக்கப்பட்டன. இவையனைத்தும் அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகளின் ஆதரவுடனேயே அரங்கேறின.
எகிப்திலும், அதன் அண்டை நாடுகளிலும் மக்களின் குறிப்பாக இஸ்லாமிய விருப்பங்களை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்ட சமூக, அரசியல் அமைப்புகள் குறி வைக்கப்பட்டன.
ஒன்று அந்த அமைப்புகள் சுதந்திரமான, நியாயமான தேர்தல்களில் பங்கெடுப்பதற்கு மறுக்கப்பட்டனர், அல்லது அந்தத் தேர்தல்களில் அவர்கள் பெற்ற வெற்றிகளை வைத்தே புதிய அடக்குமுறைகளுக்கான களங்கள் உருவாக்கப்பட்டன.
தற்போது எகிப்தில் ஏற்பட்டுள்ள மக்கள் எழுச்சி இஸ்லாமிய விழுமியங்களின் அடிப்படையில் அமைக்கப்பட்ட சமூகத்தின் வீரியத்தை எடுத்துக்காட்டும் விதமாக சான்று பகர்கிறது.
இது முஸ்லிம் சமூகத்தில் நல்லதொரு மாற்றத்திற்கான அடையாளத்தை காட்டுகிறது. எகிப்தில் நடைபெற்று வரும் மக்கள் எழுச்சியைக் கண்டு சர்வாதிகார ஆட்சி புரியும் இன்ன பிற அரபு-முஸ்லிம் நாடுகள் பாடம் படிக்க வேண்டும்.
தங்கள் நாடுகளில் குடிமக்களின் உரிமைகளையும், மனித உரிமைகளையும் நிலைநிறுத்த பாடுபடவேண்டும், பாதைகள் வகுக்க வேண்டும்.
எகிப்தில் ஹுஸ்னி முபாரக்கை இனியும் தங்களால் காப்பாற்ற முடியாது என்றுணர்ந்த அமெரிக்கா அடித்தட்டிலிருந்து உருவாகும் மக்கள் அரசைக் கண்டு கவலை கொண்டுள்ளது.அதனால்தான் ஹுஸ்னி முபாரக்கைக் கைகழுவி விட்டு மக்களுக்கு ஆதரவு தருவது போல் நடிக்கும் அமெரிக்காவும், இஸ்ரேலும் அவர்களின் விசுவாசிகளில் ஒருவரான உமர் ஸுலைமானை அரியணையில் அமர்த்த திட்டம் போடுகின்றனர், தயாராகின்றனர்.
முஸ்லிம் சகோதரத்துவ இயக்கமோ, இன்னபிற ஜனநாயக அமைப்புகளோ அதிகாரத்திற்கு வந்துவிடக் கூடாது என்பதில் மிகக் கவனமாக உள்ளனர் என குறிப்பிட்ட இ.எம். அப்துர் ரஹ்மான் எகிப்தில் ஜனநாயகம் மீண்டும் மலர இந்திய அரசு முழு ஆதரவு தெரிவித்து தேவையான நடவடிக்கையில் இறங்கவேண்டுமாறு கேட்டுக்கொண்டார்.

அரபு முஸ்லிம் நாடுகளில் ஏற்பட்டு வரும் எழுச்சிகளினால் இஸ்ரேல் அச்சம்கொண்டுள்ளது

இஸ்ரேலிய பத்திரிகையொன்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமீன் நெதன்யாகு எகிப்தில் துனிசியா போன்று மக்கள் புரட்சி ஏற்பட்டு எகிப்தின்தலைமைத்துவம் மாறிவிடுமோ என்ற அச்சம் கொண்டிருபதாக தெரிவித்துள்ளது இஸ்ரேலின் பிரபல தினப் பத்திரிகையான -Ha’aretz -வெளியிட்டுள்ள  கட்டுரை ஒன்றில் பிரதமர் பெஞ்சமீன் நெதன்யாகு தனது ஜெருசலம் அலுவலகத்தில் தனிமையில் இருந்த வண்ணம் தனது முழுபலத்தையும் பயன்படுத்தி தற்போது இருக்கும் நிலையை தக்கவைத்துக்கொள்ள முயன்று வருகின்றார்என்று தெரிவித்துள்ளதுடன்
உலக தலைவர்கள் நெதன்யாகுவை சந்திக்க ஆர்வம்கொள்ளவில்லை அவர் பிஜிங்கின் அழைப்பு ஒன்றுக்காக இன்றும் காத்திருகின்றார் அது வரவேண்டிய ஒரு அழைப்பு நெதன்யாகுவை அடிக்கடி அழைக்கும் ஒரேஒரு தலைவர் நேற்றைய உலகின் மிக முக்கிய பிரதிநிதியான எகிப்திய ஜனாதிபதி ஹுஸ்னி முபாரக் என்று தெரிவித்துள்ளது விரிவாக
நெதன்யா துனீசியாவின் புரட்சியை பார்த்து முகம் சுழிப்பது ஆச்சரியமான விடயமில்லை அவர் இந்த வாரம் அமைச்சரவை கூட்டத்தை – பிராந்தியத்தில் மிக மோசமான இஸ்திரமற்றநிலை “great instability” in the region’- தோன்றியுள்ளது என்ற எச்சரிக்கை வசனங்களுடன் தொடங்கியுள்ளார் அவர் வாலிபராக இருக்கும்போது அரபு உலகில் ஜனநாயகம் ஏற்படுத்தப்படவேண்டும் என்று வாதிட்டார் ஆனால் இந்த நாட்களில் அவர் சர்வாதிகாரிகளை பெரிதும் விரும்புகின்றார் அவர்கள் -சர்வாதிகாரிகள் -நம்பிக்கை கொள்ள முடியுமானவர்கள் நெதன்யாகுவை அதிர்சிக்கு உட்படுத்த மாட்டார்கள் என்று அந்த பத்திரிகை தெரிவித்துள்ளது.

அரபு முஸ்லிம் பிராந்திய இஸ்லாமிய அரசியல் எழுச்சி ஒரு ஆய்வுப் பார்வை !!

OurUmmah: அரசியல் மற்றும் இஸ்லாமிய துறைகளில் தகமைகளை கொண்ட ஆய்வு துறையில் அனுபவம் கொண்ட அரசியல் ஆய்வாளர்M.ஷாமில் முஹம்மட் யிடம் அரபு முஸ்லிம் பிராந்தியத்தில் இடம்பெற்று வரும் ஆர்பாட்டங்கள் தொடர்பாக Our ummah இணையதளத்தின் மற்றுமொரு கட்டுரையாளர் M.ரிஸ்னி முஹம்மட் அவர்கள் ஒரு நேர்காணலை செய்துள்ளார் இந்த நேர்காணலில் எமது கட்டுரையாளர் கேட்கும் கேள்விக்களுக்கு அவர் பதில்களை வழங்கியுள்ளார் அவை இந்த நேரத்தில் மிகவும் பொருத்தமான பயனுள்ள தகவல்களை கொண்டுள்ளது அதில் லிபியாவில் செயல்படும் இஸ்லாமிய இயக்கம் , எகிப்து, துனீசியா, லிபியா ஆகிய நாடுகளின் இஸ்லாத்தின் எதிர்காலம் நவீன இயக்கங்களான இஹ்வானுல் முஸ்லிமீன், ஹிஸ்புத் தஹ்ரீர் ஆகியவற்றின் பங்களிப்புகள் போன்ற விடையங்களை கொண்டுள்ளது அந்த நேர்காணல் இங்கு பதிவு செய்யப்படுகின்றது எமது கேள்விகளுக்கு அவர் வழங்கியுள்ள பதிகள் நேற்று வரையும் இடம்பெற்றுள்ள அரசியல் கள நகர்வுகளை அடிப்படையாக கொண்டது என்பது குறிபிடத்தக்கது
கேள்வி: கடந்த சில மாதங்களாக அரபு முஸ்லிம் நாடுகளில் ஏற்பட்டு வரும் மக்கள் ஆர்பாட்டங்கள் பற்றி உங்களின் பார்வை அவ்வாறு அமைந்துள்ளது ? விரிவாக பார்க்க
பதில்: துனீசியா, எகிப்து , லிபியா, ஜோர்டான் , அல்ஜீரீயா, யெமன், பஹ்ரைன் ஆகிய நாடுகளில் மக்கள் ஆர்பாட்டங்கள் என்பது இஸ்லாத்தை ஆன்மீக பலமாக கொண்ட விடுதலை , மற்றும் சுதந்திர முழக்கம், இந்த நாடுகளில் மக்கள் தொடரான அடக்கு முறைகளை எதிர்கொண்டுள்ளார்கள் இந்த நாடுகளில் அரசாங்கத்தின் ஊழல், மக்களின் வறுமை , இஸ்லாத்தை போதிக்கும் சக்திகள் மீதான மிகவும் மோசமாக ஒடுக்குமுறை , இஸ்லாத்தின் எதிரிகளுடன் அரச அதிகாரிகளின் உறவு என்பனதான் இந்த அரபு முஸ்லிம் நாடுகளின் எழுச்சிக்கான முக்கிய காரணங்கள்
கேள்வி: ‘சுதந்திரம்’ ‘விடுதலை’ என்ற பதங்கள் அதிகம் இந்த ஆர்பாட்டங்களில் ஒலிக்கின்றது இந்த ,சுதந்திரம்’ ‘விடுதலை’ என்ற பதங்கள் எவ்வாறு மேற்கு நாடுகள் பயன்படுத்தும் ,சுதந்திரம்’ ‘விடுதலை’ என்ற பதங்களில் இருந்து வேறுபடுகின்றது ?
பதில்: மேற்குநாடுகள் சித்தரிக்கும் ‘சுதந்திரம் ‘ என்ற கண்ணோட்டத்தில் இதை பார்க்க முடியாது மேற்சொன்ன நாடுகளில் உள்ள மக்கள் சுதந்திரத்தை முதன்மையானதாக மதிக்கின்றனர் ஆனால் மேற்கு நாடுகள கூறும் சுதந்திரம் என்ற பதப் பிரயோகத்துக்கும், இந்த நாடுகில் உள்ள மக்கள் உணரும் ‘சுதந்திரம்’ ‘விடுதலை’ என்ற பதப் பிரயோகத்துக்கும் நிறைய வித்தியாசம் உண்டு இவர்கள் இரவு நேர கேளிக்கை விடுதிகளை திறப்பதற்கும், அரை, முழு நிர்வாணமாக நடமாடவும் , கடற் கரைகளில் நிர்வாணமாக சூரிய குளியலில் ஈடுபடவும், கட்டுபாடற்ற பாலியல் உறவு கொள்ளவும் கூடிய சுதந்திரத்தை கோரவில்லை
அவைகளை துனீசியா மற்றும் எகிப்து அரசாங்கங்கள் ஏற்கனேவே செய்து வைத்துள்ளது இரவு நேர களியாட்ட விடுதிகளையும் , பார்களையும், விபச்சார விடுதிகளையும் , நிர்வாண கடற் கரையையும் எகிப்தில் மேற்கு நாடுகளுக்கு நிகராக ஹுஸ்னி முபாரக் அரசு ஷாம் அல்ஷெயிக் கடற்கரை பிரதேசத்தில் பல ஆண்டுகளாக நிர்வகித்து வந்துள்ளது அந்த ஷாம் அல்ஷெயிக் கடற்கரையில் தான் பலஸ்தீனர்களை கொலை செய்துவிட்டும், அவர்களின் வீடுகளை உடைத்து தகர்த்து விட்டு வரும் இஸ்ரேலிய படை அதிகாரிகளும் , ஆப்கானிஸ்தானிலும் , ஈராக்கிலும் கற்பழிப்பு கொலை , கொள்ளை என்ற உழைத்து களைத்து வரும் அமெரிக்கா , மற்று பிரிட்டன் படை அதிகாரிகளும் ஓய்வு எடுத்து வருகின்றனர்.
அதேபோன்று துனுசியாவின் நகரங்கள் முழுவதும் பிரான்ஸ் பாரிஸ் நகருக்கு நிகரான நிர்வாண பெண்கள் நடனமாடும் விடுதிகள் , பார்கள் என்று குவிந்து இருக்கின்றது ஏன் லிபியாவிலும் இந்த நிலை கடந்த 7 வருடங்களாக தலை தூக்க தொடங்கியிருந்தது லிபியாவின் எண்ணெய் கிணருகளை கொண்டுள்ள பகுதிகளில் இந்த விடுதிகள் உருவாக்க பட்டுவருகின்றது இவற்றை இந்த நாடுகளில் ஆர்ப்பாட்டம் செய்யும் மக்கள் பாவமாக தமது சமூக நீதிக்கு விரோதமாக பார்க்கின்றனர் இவர்கள் கோரும் சுதந்திரம் வேறு அதை மேற்கு நாடுகள் சித்தரிக்கும் விதமும் வேறு இந்த அரபு முஸ்லிம் நாடுகளில் மக்கள் ஆர்பாட்டங்கள் இந்த நாடுகளின் அரசாங்கங்களின் பொதுதன்மைக்கு எதிரானது பொதுத் தன்மையா அரசாங்கத்தின் ஊழல், மக்களின் வறுமை , இஸ்லாமிய விரோத போக்கு , மக்கள் எதிரியாக கருதும் இஸ்ரேல், அமெரிக்காவுடனான கள்ள மற்றும் பகிரங்க உறவு என்பன வற்றை குறிப்பிடலாம்.
கேள்வி : நீங்கள் உங்களில் ஒரு கட்டுரையில் ‘ஒன்றின் வீழ்ச்சி அதன் வழியில் அதன் அருகில் அதன் மாதிரிகளை கொண்டு விளங்கும் மேற்குலக சார்பு சர்வாதிகாரம் மீது சுழல் சூறாவளியாய் வீசுகின்றது’ என்று குறிபிட்டுள்ளீர்கள் இந்த சூறாவளியின் சொந்தகாரர் யார் ?
பதில்: ஒரு சொல்லில் விடை சொல்வதானால் இந்த சூறாவளியின் சொந்தக்கார சக்தி இஸ்லாம் என்றுதான் சொல்லமுடியும் , நான் மேற்சொன்ன நாடுகளில் பல இஸ்லாமிய சக்திகள் பல ஆண்டுகளா மக்கள் மத்தியில் வேலை செய்து வருகின்றது இந்த நவீன இயக்கங்களில் தோற்றத்துக்கு முன்பிருந்து இந்த பிராந்திய முஸ்லிம்களின் உள்ளங்களில் இஸ்லாம் பிரதான சக்தியாக வாழ்ந்து வருகின்றது இந்த நாடுகில் உள்ள கிராமங்கள் தோறும் இரண்டு நேரம் சாப்பிட மட்டும் முடியுமான மக்கள் ஐந்து தடைவைகள இறைவனை தொழுவதற்கு பின் நிற்பதில்லை லிபியாவில் 1913 ஆம் ஆண்டு தொடக்கம் இத்தாலிய ஆக்கிரமிப்பு படைகளுடன் உமர் முக்காதர் தலைமயிலான இஸ்லாமிய போராளிகள் படைத்த வீர காவியங்கள் லிபிய மக்கள உள்ளங்களில் இன்னும் பசுமையா இருக்கிறது அதேபோன்று மற்ற நாடுகளிலும் இந்த நிலை தொடந்து வந்துள்ளது இஸ்லாமிய இயக்கங்கள் வேலைத் திட்டங்களை நிறுவனப்படுதியுள்ளது இந்த இஸ்லாமிய இயக்கங்களுக்கு முன்பிருந்தே இந்த பிராந்திய மக்களின் உள்ளங்களை இஸ்லாம் ஆட்சி செய்து வருகின்றது என்பதுதான் உண்மை.
இந்த பிராந்தியங்களில் இஸ்லாம் என்பது அந்த பிராந்திய மக்களுடன் பிறந்து வளர்ந்து வளரும் வாழ்க்கை முறை இந்த மக்கள் மத்தியில் செயல்படும் இஸ்லாமிய நிறுவங்கள் அமைப்புகள் , இயக்கங்கள் என்பன இந்த மக்களை சரியா நெறிப்படுத்தும் வேலையை செய்துவருகின்றது இங்கு செயல்படும் குறிபிடத்தக்க சர்வதேச இஸ்லாமிய இயக்கங்களான இஹ்வானுல் முஸ்லிமீன், ஹிஸ்புத் தஹ்ரீர் போன்றவையும் பிராந்திய மற்றும் குறித்த நாடுக்கில் மட்டும் செயல்படும் இயக்கங்களான , ஸலபிகள் இயக்கம் , மாற்றத்துக்கான லிபிய இஸ்லாமிய இயக்கம் , அல் அந்நஹ்ழா துனீசியா இஸ்லாமிய இயக்கம் போன்றவகைகள் இந்த பிராந்திய எழுச்சிக்கு பின்னால் உள்ள இஸ்லாமிய இயக்கங்களாகும் இது அல்லாமல் வேறு பல இயக்கங்களுக்கும் ஆர்பட்டயங்களின்  களத்தில் வேலைசெய்துள்ளது ஆக பிராந்தியத்தின் எழுச்சி என்பது இஸ்லாத்தை அரசியல் சக்தியாக கொண்டுள்ள எழுச்சி என்பதை விட ஆன்மிக சக்தியாக கொண்ட எழுச்சி என்று தான் கூறமுடியும்.
கேள்வி : லிபியாவில் நடைபெற்று வரும் எழுச்சியின் பின்னணி பற்றி சற்று விளக்கமாக கூறமுடியுமா ?
பதில்: லிபியாவை பொறுத்த வரையில் இராணுவத்தின் ஒரு சாரரும் கடாபியின் கூலி படையான ‘மக்கள் இராணுவமும்’ மக்களை கொன்று வருகின்றது கடாபி மிகவும் கொடுரமானவர் கடந்த 1996  ஆம் ஆண்டிலும் தலைநகரான திரிபோலியில் அமைந்துள்ள அபூ சலீம் சிறைச்சாலையில் ஒரு இரவில் 1200 கைதிகளை எந்தவித கருணையும் இன்றி படுகொலை செய்துள்ளார் இதுவரையுள் பல ஆயிரகணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளானர் பல ஆயிரக்கான இஸ்லாமிய புத்திஜீவிகள பல்கலை கழகங்களிலும் ஆய்வு மையங்களிலும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் மிக தெளிவான அல்லாஹ்வின் எதிரியாக லிபிய மக்கள் பார்கின்றனர் இங்கு ஆர்பாட்டங்களில் ஈடுபடும் பல இஸ்லாமிய கோத்திரங்களை இணைக்கும் இயக்கமாக ‘மாற்றத்துக்கான லிபிய இஸ்லாமிய இயக்கம்’ பார்க்க படுகின்றது. இந்த இயக்கம்   சனூசி என்ற இம்மாமால் சுடான் ,மற்றும் லிபியாவில் இஸ்லாமிய அரசியல் , மற்றும் ஆன்மீக சிந்தனைகளை போதிக்க    1836 ஆம் ஆண்டு மக்காவில்   உருவாக்கப்பட்டது தற்போது இயங்கும் ‘மாற்றத்துக்கான லிபிய இஸ்லாமிய இயக்கம்’   சனூசி இயக்க  சிந்தனையும் தற்கால இயக்கங்களுடைய சிந்தனை போக்கையும் கொண்டுள்ளதாக பார்க்கபடுகின்றது. அன்றைய சனூசிய  அமைப்பை 1836 ஆம் ஆண்டு உருவாக்கிய  இமாமின் முழுப்பெயர் சயித்  முஹம்மது  இப்ன்  அலி  அஸ் சனூசி என்பதாகும்.
இந்த  இஸ்லாமிய  அரசியல் இயக்க பின்னணிகளை கொண்ட  மாற்றத்துக்கான லிபிய இஸ்லாமிய இயக்கம் தற்போது லிபியாவில் ஆர்பாட்டங்களை வழிநடத்துவதாக அறிய முடிகின்றது  சனூசி இயக்கம் இவர்கள்  மேற்கின்  ஆக்கிரமிப்புகளை எதிர்த்து 1902 ஆம் ஆண்டு தொடக்கம் 1913 ஆம் ஆண்டு வரை  போராடியுள்ளது 1913 க்கு பின்னர்  லிபியாவில் எழுச்சி பெற்ற உமர் முக்தாரின் போராட்டமும் இந்த பின்னணிகளை கொண்டுள்ளது இந்த இயக்கத்தின் வளர்ச்சி தொடர்    1969  ஆம் ஆண்டு கடாபினால் பதவி கவிழ்க்க பட்ட மன்னர் இத்ரீஸ் காலம் வரையும் நீடித்துள்ளது கடாபி இந்த இயக்கத்தின் உறுப்பினர்கள் சுமார் 1500 பேரை சிறை பிடித்து ஒரு மூடிய சிறையினுள் வைத்து தனது கூலிப்டை மூலம் கொலை செய்யதுள்ளார் அதன் பின்னரா காலங்களில் அந்த இயக்கம் மிகவும் இரகசியமாக இயங்கி வந்ததாக ஊகிக்கப் படுகின்றது   சனூசி இயக்க இறுதி ஆட்சியாளரான  இத்ரீஸ் கால கொடியுடன் மக்கள் அல்லாஹு அக்பர் என்ற கோஷங்களுடன் தற்போது தமது ஆர்பாட்டங்களை மக்கள் நடத்துகின்றனர்.
இத்ரீஸ் மன்னர் லிபியாவை ஆண்ட ஒரே மன்னராகவும் ஒரு இஸ்லாமிய சிந்தை கொண்டவராகவும் பார்க்கப் படுகின்றார் லிபியாவை பொறுத்த வரை மேற்கு உலகம் கடுமையான பயத்தில் இருக்கிறது துனீசியா , எகிப்து, ஜோர்டான் ,யெமன் போன்று இங்கு அமெரிக்கா உட்பட மேற்கு நாடுகளின் மேற்குலகிற்கு விசுவாசமான நிறுவனங்கள மிகவும் குறைவாக இருப்பதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர் இதனால் துனீசியா , எகிப்து போன்ற நாடுகளின் இவர்கள் நிம்மதி பெருமூச்சு விடமுடியாது அதன் காரணமாக முழுமையா தமது உளவு நிறுவங்களின் கையில் நடவடிக்கைகளை கொடுத்து விட்டு முடிவுகளுக்காக காத்திருகின்றனர்.
இந்த நிலை மிகவும் ஆபத்தானது ஆப்கானித்தான் ஈராக் போன்ற நாடுகளில் அமெரிக்காவின் உளவு நிறுவங்கள் செய்யும் அனைத்து அழிவு வேலைகளையும் இங்கும் இவர்கள் மேற்கொள்ள முயன்று வருவதாக தெரிகின்றது  இங்கு அமைதி வழியில் ஆர்ப்பாட்டம் இயற்கைக்கு புரம்பாகதான் அமைப்பும் கொடுங்கோல் ஆட்சியாளர்களுக்கு எதிராக சாத்விக முறைகளை பயன்படுத்தி போராடவும், ஆயுதங்கள் மூலம் போராடவும் எமது பலம் பெரும் இமாம்கள் அனுமதி அளிகின்றனர்  இமாம் அபூஹனிபா போன்ற இமாம்கள் கொடுமையான முஸ்லிம் ஆட்சியாளர்களுக்கு அவர்கள் தொழும் நிலையிலும் ஆயுதம் ஏந்தி போராட முடியும் என்று கூறியுள்ளானர்.
மற்ற இமாம்களான இமாம் ஷாபி , இமாம் மாலிக் , இமாம் அபூ ஹனிபா போன்றவர்கள் கொடுமையான முஸ்லிம் ஆட்சியாளர்ககள்   தொழும் நிலையில் அவர்களுக்கு எதிராக ஆயுதம் தரிக்காமல் அனைத்து அமைதியான வழிமுறைகளையும் பயன்படுத்தி போராட முடியும் என்று தெரிவித்துள்ளனர் இங்கு களம் தான் போராட்ட  வடிவத்தை தீர்மானிக்கின்றது என்பது உண்மை அனுமதிகள் உண்டு என்பதற்காக பொருத்தமற்ற வழிமுறைகளை தெரிவு செய்வதை இஸ்லாம் ஏற்று கொள்ளாது என்பது கவனத்தில் கொள்ளப்படவேண்டும்
கேள்வி : இந்த அரபு முஸ்லிம் நாடுகளில் ஏற்பட்டு வரும் எழுச்சிகள் புரட்சியாக மாறிவிட்டதா ?
பதில்: துனீசியா, எகிப்து , லிபியா, ஜோர்டான் , அல்ஜீரீயா, யெமன், பஹ்ரைன் ஆகிய நாடுகளில் துனீசியா, எகிப்து ஆகிய இரண்டு நாடுகளிலும் மக்கள் ஆர்பாட்டங்கள் இடம்பெற்று மேற்கு உலகம் சார்பான சர்வாதிகாரிகள் நீக்கப்பட்டுள்ளனர் ஆனால் இன்னும் எந்த புரட்சியும் அங்கு இடம்பெறவில்லை காரணம் அந்த நாடுகள் இன்னும் அமெரிக்காவினதும் , மேற்கு உலகினதும் வலுவான கட்டுபாட்டின் கீழ் தான் இன்னும் இருக்கிறது.
துனீசியாவில் பின் அலியின் அரசாங்கம் தான் தொடந்து இடைக்கால அரசாங்கத்தை கையில் வைத்துள்ளது அதேபோன்று எகிப்திலும் இராணுவம் கையில் வைத்துள்ளது இவை யாப்பு மாற்றம் சட்ட மறுசீரமிப்பு என்று நகர்ந்து செல்கின்றது இதன் மூலம் சுதந்திரமான தேர்தல் ஒன்றை விரைவில் நடத்தபோவதாக தெரிகின்றது ஆனாலும் எதிர் தரப்பில் செல்வாக்கான தலைவர்கள் மக்களால் இனம் கனப்படாத நிலையிலும் எகிப்தில் இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பும் , துனீசியாவில் அந்நஹ்ழா இஸ்லாமிய அமைப்பும் ஜனாதிபதி தேர்தலில் தாம் வேட்பாளர்களை நிறுத்த மாட்டோம் என்று தெரிவித்துள்ளது இந்த நிலையில் அரசியல் களம் மேற்குலகுகிற்கு சுதந்திரமாக் திறந்து விடப்பட்டுள்ளது இதனால் மீண்டும் மேற்கின் மேலாதிக்கம் இந்த இரண்டு நாடுகளிலும் இலகுவாக அமர்ந்து கொள்ளும் அதானால் ஆர்பாட்டங்கள் மாற்றங்களை கொண்டுவருகின்றது என்றாலும் அது புரட்சி என்ற தரத்தை கொண்டு பார்க்க முடியாது உள்ளது  எதிர்கால இஸ்லாமிய புரட்சி ஒன்றுக்கான வாயல்களை திறந்துள்ளது என்று கூறலாம்.
துனீசியா, எகிப்து ஆகிய இரண்டு நாடுகளிலும் மிகவும் கடுமையா இஸ்லாமிய விரோத அரசுகள் இஸ்லாம் பேசும் மக்களின் குரல் வளையை திரிகிக்கொண்டு இருகின்றன இந்த இஸ்லாமிய வாதிகள் சிறையில் அடைக்கபட்டார்கள் , கொலை செய்யப்பட்டார்கள், நாடு கடத்தப்பட்டார்கள், ஆயிரக் கணக்கான மக்கள் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறைகளில் வாடுகின்றனர் , பலர் காணாமல் போயுள்ளனர் எகிப்தில் இஹ்வானுல் முஸ்லிமீன் உட்பட பல இஸ்லாமிய இயக்கங்கள் தடைசெய்யப்பட்டது, மஸ்ஜிதுகளில் உரையாற்ற முடியாது பெரும்பாலான் புத்திஜீவிகள் தடை செய்யபட்டார்கள் நாட்டின் மஸ்ஜிதுகளின் உரைகள் கூட உள்நாட்டு அமைச்சின் கண்காணிப்பில் இருந்தது பல நூறு மஸ்ஜித் இமாம்கள் கடத்தப்பட்டு காணாமல் போனார்கள் இன்னும் பலர் சிறைகளில் இன்னும் எந்த குற்றசாட்டுகளும் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் இன்னும் பல மனிதர்கள் முபாரக் அரசுக்கு எதிராக பேசியதிற்காக கடத்தப்பட்டு விமானங்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டு கற்களை உடலில் கட்டி உயிருடன் கடலில் வீசப் பட்டார்கள் என்று தகவகள் தெரிவிக்கின்றன.
ஆகவே இந்த நாடுகளின் இஸ்லாமிய இயக்கங்கள் முதலில் இந்த அராஜகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முனைகின்றது அது மேற்கு சார்பான அரசாக இருந்தாலும் மக்களுக்கு முழு சுதந்திரத்தை வழங்கும் யாப்பு , அரசாங்கம் என்பனவற்றை அனுமதிக்க முற்படுகின்றது அந்த நிலை ஏற்படுத்தப் பட்டால் அது இஸ்லாத்தின் வளர்சிக்கு பெரிதும் துணை புரியும் என்று நம்புகின்றனர் ஆக தொடர்ந்தும் மேற்கு ஆசான்கள்தான் இந்த இரண்டு நாடுகளிலும் நிர்வாக ஆசனங்களில் இருக்கபோகின்றனர் இது இந்த இரண்டு நாடுகளிலுமுள்ள ஒரு ஒற்றுமை
கேள்வி : எகிப்தை பொறுத்தவரை இது உடனடியா கிலாபத் நோக்கிய இஸ்லாமிய அரசியல் எழுச்சியா வடிவம் பெறவும், தோன்ற போகும் அரசாங்கம் இஸ்லாமிய அரசாங்கமாக தோற்றுவிக்கப்பட்ட இஹ்வானுல் முஸ்லிமீன் நேரடியாக எந்த நடவடிக்கையிலும் இறங்கவில்லை என்ற விமர்சனம் முன்வைக்கப்படுகின்றது இந்த அரபு முஸ்லிம் நாடுகளின் எழுச்சி இஸ்லாமிய அமைதி புரட்சி ஒன்றாக பரிமாணம் பெறுமா ?
பதில்: இந்த எழுச்சி எகிப்து, துனீசியா ஆகிய நாடுகளை பொறுத்தவரை உடனடியாக இஸ்லாமிய புரட்சி ஒன்றாக பரிமாணம் பெறாது ஆனால் விரைவாக இஸ்லாமிய புரட்சி ஒன்றை நோக்கி பரிணாம வளர்ச்சி அடையும் என்றுதான் களம் சொல்கின்றது இஸ்லாமிய இயக்கங்களை பொறுத்த வரையில் பிராந்தியத்தில் மக்கள் எழுச்சிக்காக கடுமையாக பாடுபட்டுள்ளார்கள் ஆனால் ஆர்பாட்டங்களில் பங்கு பற்றினார்கள் அவற்றை வழிநடாத்த வில்லை அதேபோன்று அந்த எழுச்சி இஸ்லாமிய புரட்சியாக மாற்றம் பெற எந்த வியூகங்களையும் அவர்கள் அமைக்கவில்லை அதற்கு காரணம் பிராந்தியத்தில் தற்போது ஒரு இஸ்லாமிய புரட்சி என்பதை அதன் பருவத்காலத்துக்கு முந்தியதாக பார்கின்றனர் இஸ்லாமிய புரட்சி ஒன்றுக்கான பருவகாலத்துக்கு இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டும் என்று கருதுகின்றனர் என்பதாக தெரிகின்றது .
கேள்வி : இந்த அரபு முஸ்லிம் நாடுகளில் ஏற்பட்டு வரும் எழுச்சிக்கிடையான ஒற்றுமை வேற்றுமை என்ன ?
பதில்: துனீசியா ஆகிய நாடுகளை பொறுத்தவரை அனைத்து மக்களும் கந்துகொண்ட அனைத்து தரப்பினரும் ஒன்று பட்டு ஒரு இலக்குடன் மிகவும் அமைதியான முறையில் சர்வாதிகாரிகளை வெளியேற்றியுள்ளனர் அதன் பின்னரான நிலை பல மாற்றங்களுடன் மக்கள் விரும்பும் விடுதலை , சுதந்திரம் சட்டரீதியாக உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளுடன் மேற்கு உலகின் வரம்பற்ற அதிகாரங்கள் ஓரளவு மட்டுபடுத்தபடுத்த நிலையில் மேற்கு மீண்டும் மேலாதிக்கம் செலுத்தும் நிலையில் இது வரை இந்த இரண்டு நாடுகளிலும் வித்தியாசங்களை காணமுடியாதுள்ளது
ஆர்பாட்டங்கள் நடைபெற்றுவரும் நாடுகளில் குறிப்பாக லிபியா தவிர்ந்த மற்றைய நாடுகளான , ஜோர்டான் , அல்ஜீரீயா, யெமன், பஹ்ரைன் ஆகிய நாடுகளில் எதிர் கட்சிகள் ஒத்த குரலில் நாட்டின் அதிகாரிகளை வெளியேற்றும் ஆர்பாட்டங்களில் முழுமையாக் ஈடுபடவில்லை குறிப்பாக , அல்ஜீரீயாவில் இஸ்லாமிய இயக்கங்கம் நாட்டின் அடுத்த தேர்தல் வரையும் தற்போது இருக்கும் அரசாங்கத்துக்கு அவகாசம் கொடுக்கவேண்டும் என்று கேட்டுள்ளதால் அதன் வேகம் சற்று குறைந்து வருகின்றது அதிரடியாக அல்ஜீரீயா நாட்டில் பல ஆண்டுகள் பழமை பாய்ந்த அவசரகால சட்டம் நேற்று நீக்கப்பட்டது மக்களின் பல கோரிக்கைகள் நிறைவேற்றபடும் என்று அரசாங்கள் அறிவித்துள்ளதும் அதற்கு சில இஸ்லாமிய சக்திகளின் ஆதரவு இருப்பதாலும் ,களம் இங்கு வித்தியாசப்படுகின்றது

இஸ்லாம் ஒரு அறிமுகம்

இஸ்லாம் என்றால் என்ன?

இஸ்லாம் என்ற சொல்லுக்கு இரண்டு பொருள்கள் உண்டு:


(1)
 அமைதி, சமாதானம் 
(2) ஓரே இறைவனுக்கு முழுமையாக அடிபணிதல் 

அண்ட சராசரங்களையும் படைத்து பரிபாலிக்கும் ஒரே இறைவனான அல்லாஹ்வை மட்டுமே வணங்கி, அவன் இட்ட கட்டளைகளுக்கு முழுமையாக அடிப்பணிந்து ஒருவன் வாழும்பொழுது அவன் இவ்வுலக வாழ்க்கையிலும் மரணத்திற்கு பின்னுள்ள நிரந்தரமான வாழ்க்கையிலும் சமாதானமாகவும் நிம்மதியாகவும் வாழ்கிறான்.

மேலும் இஸ்லாம் என்பது வெறுமனே ஒரு மதமல்ல. இறைவனால் வகுத்து தரப்பட்ட ஒரு முழுமையான வாழ்க்கை முறையாகும். ஏன் என்றால் மற்ற மதங்களை போல் இஸ்லாம் வெறுமனே வெறும் வணக்கத்தை மட்டும் மக்களுக்கு போதிக்கவில்லை. இறைவணக்கம், குடும்பவாழ்க்கை, பொருளீட்டல்,  அரசியல், சமூகவாழ்க்கை, தனிமனித ஒழுக்கங்கள் என்று ஒரு மனிதன் பிறந்ததிலிருந்து இறக்கும் வரை எவையெல்லாம் அவன் வாழ்க்கையில் சம்பந்தப்படுமோ அவை எல்லாவற்றையும் பற்றி இஸ்லாம் கற்று தந்துள்ளது.


முஸ்லிம்கள் என்றால் யார்?
உலக சனத்தொகையில் ஏறக்குறைய 150 கோடி மக்களாக அதாவது 23% ஆக வாழும் முஸ்லிம்கள் என்பவர்கள் இஸ்லாம் மதத்தை பின்பற்றுபவர்கள் ஆவார்கள். அதாவது அல்லாஹ்வை ஒரே இறைவனாக ஏற்று அவனை மட்டும் வணங்கக்கூடியவர்கள். நபிகள் நாயகம் சல்லல்லாஹு அலைவசல்லாம் அவர்களை இறைவனின் தூதராக ஏற்று அவர்களை தன் வாழ்க்கையின் முன் மாதிரியாக கொண்டு அவர்களை பின்பற்றி வாழ்பவர்கள். 

முஸ்லிம் சனத்தொகை புள்ளிவிபரம் 
மொத்த முஸ்லிம் சனத்தொகை -  ஏறக்குறைய 150 கோடியிலிருந்து 157 கோடி வரை (estimated)
உலகின் மிகப்பெரிய முஸ்லிம் நாடு - இந்தோனேசியா -  ஏறக்குறைய 20 கோடி முஸ்லிம்கள்
மேலதிக முஸ்லிம் புள்ளிவிபரங்களுக்கு

இஸ்லாத்தின் அடிப்படை

"லாயிலாஹா இல்லல்லாஹு முஹம்மதுர் ரசூலுல்லாஹ்"

வணக்கத்துக்கு உரிய நாயன் அல்லாஹ்வை தவிர வேறு யாரும் இல்லை; முஹம்மது நபி சல்லல்லாஹு அலைவசல்லம் அவர்கள் அல்லாஹ்வின் திருதூதர் ஆவார்கள் என்பது இந்த இஸ்லாமிய மூல மந்திரத்தின் பொருளாகும்.

இதன் படி ஒரு முஸ்லிம் அல்லாஹ்வை ஒரே இறைவனாக ஏற்று அவனை மட்டுமே வணங்க வேண்டும். முஹம்மது நபி சல்லல்லாஹு அலைவசல்லம் அவர்களை அல்லாஹ்வின் திருதூதராக ஏற்று அவர்களின் வாழ்வை முழுமையாக பின்பற்றி நடக்க வேண்டும். உலகிலுள்ள சர்வ உறவுகளை விடவும் பொருட்களை விடவும் எல்லாவற்றை விடவும் அல்லாஹ்வையும் அவனது திருத்தூதர் நபிகள் நாயகம் சல்லல்லாஹு அலைவசல்லம் அவர்களையும் தம் உயிரை விடவும் நேசிக்க வேண்டும். இது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கட்டாய கடமையாகும்.

இதை விட ஒரு முஸ்லிம் உலகம் படைக்கப்பட்டதில் இருந்து இறுதி இறைதூதராக வந்த நபிகள் நாயகம் சல்லல்லாஹு அலைவசல்லம் அவர்களது காலம் வரை இவ்வுலகிற்கு வந்த அத்தனை இறைதூதர்களையும் ஏற்று நம்பிக்கை கொள்ளவேண்டும். எனவே தான் இறைதூதர்கள் ஆதம், நோவா, ஆப்ரஹாம், மோசஸ், தாவீது, இயேசு (அல்லாஹ்வினது சாந்தியும் சமாதானமும் இவர்கள் அனைவர் பேரிலும் ஏற்படுமாக) போன்ற அனைத்து இறைத்தூதர்களையும் முஸ்லிம்கள் இறைத்தூதர்களாக விசுவாசம் கொண்டு அவர்களை கண்ணியப்படுத்துகின்றனர். கிறிஸ்தவர்களால் இறைவன் என்றும் இறைவனின் குமாரன் என்றும் சொல்லப்படும் இயேசு கிறிஸ்து (அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் அவர்கள் பேரில் ஏற்படுமாக) உண்மையில் இஸ்லாத்தின் ஒரு இறைதூதரே அன்றி வேறில்லை.

ஈமான் (இறை நம்பிக்கை) என்றால் என்ன?

ஒவ்வொரு முஸ்லிமும் கீழே சொல்லப்பட்ட ஒவ்வொரு விடயத்தையும் உள்ளத்தால் பரிபூரணமாக ஏற்று நம்பிக்கை கொள்ள வேண்டும். இதில் ஏதாவது ஒரு விடயத்தையாவது ஒருவன் நம்பவில்லை என்றால் அவன் முஸ்லிமாக கருதப்படமாட்டான்.

(1) அல்லாஹ்வை நம்ப வேண்டும்

(2) அல்லாஹ்வினால் படைக்கப்பட்ட மலக்குமார்களை (வானவர்களை ) நம்பவேண்டும்
(3) அல்லாஹ் அருளிய வேதங்களை நம்ப வேண்டும்
(4) அல்லாஹ் இவ்வுலகிற்கு அனுப்பிய திருத்தூதர்களை நம்பவேண்டும்
(5) இறுதி நாளை நம்ப வேண்டும் - அதாவது ஒரு நாள் இவ்வுலகம் அழிந்து மனிதர்கள் யாவரும் மரணித்து     மீண்டும் அல்லாஹ்வினால் மறுமை நாளில் எழுப்பப்பட்டு அவர்கள் செய்த நன்மை தீமைக்கேற்ப தீர்ப்பு வழங்கப்பட்டு சுவர்க்கம் நரகம் செல்வர் என்பதை நம்ப வேண்டும்
(6) நன்மை தீமை யாவும் இறைவனின் நாட்டப்படியே நடக்கிறது என்பதை நம்பவேண்டும்.


இஸ்லாத்தின் அடிப்படை கடமைகள் என்ன?
ஒருவன் முஸ்லிமாக இருந்தால் அவன் மீது பின்வருவன கடமையாகிறது.

(1) கலிமா/ஈமான் (இறை நம்பிக்கை)
(2) தொழுகை (தினமும் ஐவேளை இறைவனை தொழ வேண்டும்)
(3) நோன்பு (வருடத்தில் ஒரு மாதம் (ரமழான்) நோன்பு நோற்க வேண்டும்)
(4) ஸக்காத் (ஒவ்வொரு வருடமும் செல்வந்தர்கள் தம் செல்வத்தில் குறிப்பிட்ட வீதத்தை இறை வரி கொடுக்க வேண்டும்))
(5) ஹஜ் (உடல், பொருள் வசதி உள்ளவர்கள் வாழ்க்கையில் ஒரு முறையாவது புனித மக்காவிற்கு சென்று இக்கடமையை நிறைவேற்ற வேண்டும்)


ஒருவர் முஸ்லிமாக மாற என்ன செய்ய வேண்டும்?
ஒருவர் முஸ்லிமாக மாற நாட்டம் கொண்டால் அவர் இஸ்லாமிய மூல மந்திரமான கலிமாவாகிய
"லாயிலாஹா இல்லல்லாஹு முஹம்மதுர் ரசூலுல்லாஹ்"
"வணக்கத்துக்கு உரிய நாயன் அல்லாஹ்வை தவிர வேறு யாரும் இல்லை; முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைவசல்லம் அவர்கள் அல்லாஹ்வின் திருதூதர் ஆவார்கள். "
என்பதை உள்ளத்தால் உறுதிப்பூண்டு நாவினால் சொல்லவேண்டும். பின்னர் குளித்து சுத்தமாகி அன்றைய நேரத்திலுள்ள தொழுகையை தொழ வேண்டும். பின்னர் இஸ்லாமிய மார்க்க சட்டத்திட்டங்களை மார்க்க ஆலிம்களிடம் கற்றுகொள்ள முயற்சி செய்ய வேண்டும்.


முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்  என்பவர்கள் யார்?
அல்லாஹ் மனித இனத்தை படைத்து அவர்களை நேரான வழியில் நடாத்த காலத்துக்கு காலம்  திருத்தூதர்களை (நபிமார்களை) அனுப்பி வைத்தான். இந்த திருத்தூதர்களை மனித இனத்தில் இருந்தே உருவாக்கி அவர்களை அச்சமுதாய மக்களிடம் அனுப்பி அவர்களுக்கு எது சரி, எது பிழை என்பதை கற்றுக்கொடுத்தான். அவ்வாறு அனுப்பப்பட்ட திருத்தூதர்களில் இறுதியானவர்கள் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஆவார்கள்.

ஆனால் அண்ட சராசரங்களையும் படைக்கும் முன்னர் முதன் முதலாக அல்லாஹ் படைத்தது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் ஒளியையாகும் (நூரே முஹம்மதியா).  அவர்களின் ஒளியை கொண்டே அல்லாஹ் சர்வ வஸ்துக்களையும் படைத்தான்.

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் கூறினார்கள்:
"நான் அல்லாஹ்வின் ஒளியினாலானவன். அனைத்தும் என் ஒளியினாலானவைகளே"
(நூல்: தாரமி)

இவ்வாறு சர்வ வஸ்துக்களையும் படைத்த பின் முதல் மனிதராக அல்லாஹ் படைத்தது இறைத்தூதர் ஆதம் அலைஹிவசல்லம் அவர்களையாகும். அவர்களின் உடலுக்குள் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் ஒளியான நூரே முஹம்மதியாவை செலுத்தினான். பின்னர் அந்த ஒளி ஆதம் அலைஹிவசல்லம் அவர்களின் முதுகந்தண்டில் இருந்து பரிசுத்தமான முதுகந்தண்டுகளுக்கு மாறி கொண்டே வந்து இறுதியாக புனித மக்கமா நகரில் வாழ்ந்து வந்த அப்துல்லாஹ் ரலியல்லாஹு அன்ஹு  என்பவரின் முதுகந்தண்டில் இருந்து அவரது மனைவி அன்னை ஆமினாவின் வயிற்றுக்கு மாறி பின்னர் இப்பூவுலகத்தில் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களாக பிறந்தது.
பிறப்பதற்கு முன் தந்தையையும் ஆறாவது வயதில் தாயையும் இழந்த நாயகமவர்கள் பாட்டனாரின் வளர்ப்பிலும் பின்னர் சிறிய தந்தையாரின் வளர்ப்பிலும் வளர்ந்து வந்தார்கள். சிறு வயதில் இருந்து அல்லாஹ்விற்கு இணை வைக்காமல் மிக ஒழுக்கத்தோடும் நட்குணத்தோடும் வாழ்ந்த நாயகமவர்கள் எல்லோராலும் நம்பிக்கையாளர் என்றும் உண்மையாளார்  என்றும் போற்றப்பட்டார்கள். தங்களது நாற்பதாவது வயதில் அல்லாஹ்விடமிருந்து வானவர் ஜிப்ரீல் மூலமாக வஹி என்னும் இறைத்தூது வந்தது. உலக மக்களுக்கு தாம் இறுதி இறைத்தூதராக வந்திருப்பதை அறிவிக்குமாறு அல்லாஹ் கட்டளையிட்டான். 23 வருடங்கள் இறைசெய்தியை மக்களுக்கு எத்தி வைத்து இலட்சக்கணக்கான மக்களை இஸ்லாத்தில் இணைத்து ஒரே நாயனான அல்லாஹ்வை வணங்கவும் ஒழுக்கத்தோடு வாழவும் கற்றுகொடுத்து பரிசுத்தவான்களாக மாற்றினர். தமது 63வது வயதில் மதீனாவில் வைத்து  இப்பூவுலகை விட்டும் பிரிந்தார்கள்.


நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களின் முழு சரிதையை வாசிக்க..... 


முஸ்லிம்கள் எதனை பின்பற்ற வேண்டும்?
முஸ்லிம்கள் அல்லாஹ்வினால் அருளப்பட்ட வேதமான அல் குர்ஆனையும் அல் ஹதீஸையும் பின்பற்றுகின்றனர். மேலும் முஸ்லிம்கள் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களின் குடும்பத்தார்களான அஹ்லுல் பைத்துக்களையும், தோழர்களான ஸஹாபாக்களையும் பின்பற்றுகின்றனர்.


நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்கள் கூறினார்கள்:
"நான் உங்களிடம் இரண்டு காரியங்களை விட்டு செல்கிறேன். அவ்விரண்டையும் நீங்கள் பற்றி பிடிக்கும் காலமெல்லாம் திட்டமாக வழி தவற மாட்டீர்கள். ஒன்று அல்லாஹ்வின் வேதமாகிய அல்குர்ஆன் மற்றது எனது வழிமுறை."   (நூல் - முஅத்தா)

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்கள் கூறினார்கள்:
"நான் உங்களிடம் இரண்டு காரியங்களை விட்டு செல்கிறேன். அவ்விரண்டையும் நீங்கள் பற்றி பிடிக்கும் காலமெல்லாம் ஒருபோதும் வழி தவற மாட்டீர்கள். ஒன்று அல்லாஹ்வின் வேதமாகிய அல்குர்ஆன் மற்றது எனது குடும்பத்தார்கள்"  (நூல் - முஸ்லிம், திர்மிதி, மிஷ்காத், முஸ்னத் அஹ்மத்)


நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்கள் கூறினார்கள்:
"எனது ஸஹாபாக்கள் நட்சத்திரங்களை போன்றவர்களாவார்கள். அவர்களில் எவரை பின்பற்றினாலும் நீங்கள் நேர் வழி பெறுவீர்கள்"       (நூல் - மிஷ்காத்)



அல் குர்ஆன் என்றால் என்ன?
அல்குர்ஆன் என்பது அல்லாஹ்வினால் இறைத்தூதர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களுக்கு அனுப்பப்பட்ட இறை வசனங்களாகும். இதில் இறைவனின் வல்லமைகள், மனிதகளுக்கான ஏவல்கள், விலக்கல்கள், முந்தைய சமூகங்களின் வரலாறு, இன்னும் பல விசயங்கள் காணப்படுகின்றன. இதுவே முஸ்லிம்களின் புனித நூலாகும். ஏனெனில் இது அல்லாஹ்வின் சொல்லாகும். இது முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல முஸ்லிமல்லாதோருக்கும்  நேர் வழிகாட்டியாக அமைந்துள்ளது. இந்த இறை வசனங்கள் இறங்கியபோது அவை ஒவ்வொன்றும் அவ்வப்போது குறித்து வைத்து கொள்ளப்பட்டது. மேலும் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களின் தோழர்களால் மனனம் செய்துகொள்ளப்பட்டது. பின்னர் இது நூல் வடிவில் உருவாக்கப்பட்டது. எனவே  இதில் ஏனைய மதங்களின்  புனித நூற்களை போல் எந்த ஒரு மனிதனின் சொற்களோ எண்ணங்களோ உட்புகுத்தப்படவில்லை. நூற்றுக்கு நூறு வீதம் பரிசுத்த இறை வசனங்கள் மட்டுமே உள்ளது. மேலும் சில மதத்தினரின் புனித நூற்களை போல காலத்துக்கு காலம் இது மாறுவதும் இல்லை. ஏறக்குறைய  1400 வருடங்களாக ஒரே அல் குர்ஆனையே முழு இஸ்லாமிய உலகும் பயன்படுத்துகிறது. அல்லாஹ் அதனை இறுதி நாள் வரையில் பாதுகாத்து வருகிறான்.



அல் ஹதீஸ் என்றால் என்ன?

அல் ஹதீஸ் என்பது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்கள் சொன்னவை, செய்தவை, மற்றவர்கள் செய்யும்போது அங்கீகரித்தவை ஆகியவற்றை குறிக்கும்.

இவை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களின் குடும்பத்தார்களான அஹ்லுல் பைத்துக்களாலும், தோழர்களான சஹாபாக்களாலும் குறித்து வைக்கப்பட்டும் மனனம் செய்யப்பட்டும் பாதுக்காக்கப்பட்டது. பிற்காலத்தில் வந்த இமாம்களால் இவை நூல் வடிவில் தொகுக்கப்பட்டது. இந்த நூல்களில் மிக ஆதாரப்பூர்வமானவை புகாரி, முஸ்லிம், அபூதாவூத், திர்மிதி, இப்னு மாஜா, நஸாயி என்பவையாகும்.



அஹ்லுல் பைத் (நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களின் குடும்பத்தினர்) என்றால் யார்?

அஹ்லுல் பைத் என்னும் குடும்பத்தார்கள் என்பது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு  அலைஹிவசல்லம் அவர்களின் மகள் ஸைய்யதா பாத்திமா, மருகர் ஸைய்யதுனா அலி, பேரப்பிள்ளைகளான ஸைய்யதுனா ஹசன், ஸைய்யதுனா ஹுசைன் (இவர்கள் அனைவரையும் அல்லாஹ் பொருந்தி கொள்வானாக) ஆகியோரையும் இவர்களின் பரம்பரையில் வந்துதித்தவர்களையும் குறிக்கும்.


ஸஹாபாக்கள் (நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களின் தோழர்கள்) என்றால் யார்?

ஸஹாபாக்கள் என்னும் தோழர்கள் என்பது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களின் காலத்தில் வாழ்ந்து நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களை நம்பிக்கை கொண்டு அவர்களை நேரடியான கண்களால் பார்த்த முஸ்லிம்களை குறிக்கும்.


இஸ்லாமிய சட்ட மூலாதாரங்கள் எவை?

இஸ்லாமிய சட்ட மூலாதாரங்கள் என்பது முஸ்லிம்கள் மார்க்கம் சம்பந்தமான சட்டத்திட்டங்களை பெற்றுக்கொள்ள பயன்படுத்தும் அடிப்படை ஆதாரங்களை குறிக்கும். இவையாவன:

(1) அல் குர்ஆன் - அல்லாஹ்வின் இறைவசனங்கள்.
(2) அல் ஹதீஸ் - நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களின் சொல், செயல்,  அங்கீகாரம்.
(3) இஜ்மாஹ் - இஸ்லாமிய மார்க்க பேரறிஞர்களின் பத்வா என்னும் மார்க்கதீர்ப்பு.
(4) கியாஸ் -

உண்மையில் அல்குர்ஆனுக்கு நடைமுறை விளக்கமாகவே நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்களின் வாழ்க்கை இருக்கிறது. அல் குர்ஆனில் பல விடயங்கள் சுருக்கமாகவே சொல்லப்பட்டுள்ளது. எனவே அவற்றிற்கான முழு விளக்கமும் அல் ஹதீஸில் இருக்கிறது. இந்த ஹதீஸ்கள் பிற்கால சமுதாய மக்களிடம் வந்து சேரும்போது சிலவேளை ஒரே விடயம் பல்வேறு விதமாக கூறப்பட்டு இருந்தது. எனவே பாமர மக்கள் குழம்பி போகக்கூடாது என்பதற்காக அக்காலத்தில் வாழ்ந்த மாபெரும் இமாம்கள் அவற்றை விளக்கி சட்டங்கள் எழுதினர். அவை மத்ஹபுகள் என்று குறிப்பிடப்படுகிறது.


மத்ஹபுகள் என்றால் என்ன?

மத்ஹபுகள் என்பது அல் குர்ஆனையும் அல் ஹதீஸையும் கொண்டு மாபெரும் இமாம்களால் எழுதப்பட்ட மார்க்க சட்டங்கள் ஆகும். சில நுணுக்கமான விடயங்களுக்கும் புதிதான விடயங்களுக்கும் ஒவ்வொரு பாமர மனிதனாலும் அதற்கான சட்டத்தை நேரடியாக அல் குர்ஆனில் இருந்தும் அல் ஹதீஸில் இருந்தும் தேடி பெற முடியாது. அதற்கான அறிவு அவனிடம் காணப்படுவதில்லை. எனவே அவ்வாறான மார்க்க வினாக்களுக்கு இந்த இமாம்கள் அல் குர்ஆன், அல் ஹதீஸ் ஆகியவற்றின் உதவியோடு கொடுத்த விளக்கங்களே மத்ஹபுகள் என்று பெயர் பெறுகின்றன.

இந்த மத்ஹபுகளாவன:

    பெயர்                              உருவாக்கிய இமாம்
(1) ஹனபி                          இமாம் அபூஹனிபா ரலியல்லாஹு அன்ஹு 
(2) மாலிக்கி                        இமாம் மாலிக் ரலியல்லாஹு அன்ஹு
(3) ஷாபி                             இமாம் ஷாபி ரலியல்லாஹு அன்ஹு
(4) ஹன்பலி                       இமாம் அஹ்மத் இபுனு ஹன்பல் ரலியல்லாஹு அன்ஹு